கடலில் இறக்க இருந்த சிறுவர்களை காப்பாற்றிய ட்ரோன் – பரபரப்பு வீடியோ

அமெரிக்கா போன்ற வல்லரசுகள், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆட்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அதே சிறிய விமானத்தை வைத்து, கடலில் தத்தளித்து இறக்க இருக்க 2 சிறுவர்களை கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளார்கள் அவுஸ்திரேலிய கடலோர காவல் பிரிவினர்.

அவுஸ்திரேலியாவின் நியூ – சவுத் -வேல்ஸ் என்னும் மா நிலத்தில் உள்ள கடல் கரையில் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் நீந்திக் கொண்டு இருந்தார்கள்.

திடீரென கடல் கொந்தளிக்க ஆரம்பித்து, கடல் அலைகள் பலமாக வீசவே. அவர்கள் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். எவ்வளவு நீந்தியும் அவர்களால் கரையை அடைய முடியவில்லை.

இதனால் அவர்கள் கடலில் தத்தளித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் இறுதியாக களைத்துப் போய் இறக்கும் தறுவாயில் இருந்தார்கள்.

4840EE5700000578-5282557-image-a-71_1516251613469  கடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன் - பரபரப்பு வீடியோ 4840EE5700000578 5282557 image a 71 1516251613469

இதனை கரையில் நின்று பார்த்த காவல் பிரிவினர் விரைந்து செயல்பட்டார்கள். நீந்திச் சென்று காப்பாற்றுவது என்பது இந்த அசாதாரன சூழலில் நடக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு மீட்ப்பு படகை அனுப்ப பல நிமிடங்கள் பிடிக்கலாம். இதனால் தம்மிடம் இருந்த நோட்டமிடும் ஆளில்லா விமானத்தில், டியூப் பொன்றை கட்டி அதனை அனுப்ப முடிவு செய்தார்கள்.

நீரில் பட்ட உடனே தானாக காற்றை உறிஞ்சி அந்த பிளாஸ்டிக் டியூப் உப்பிக் கொள்ளும். இதனால் இதனைப் பிடித்தால் அவர்கள் தண்ணீரில் மூழ்க மாட்டார்கள்.

உடனே ஆளில்லா விமானத்தை அனுப்பி. அவர்கள் இருக்கும் இடத்தில் அந்த பிளாஸ்டிக் ரியூபைப் போட்டார்கள். இரண்டு சிறுவர்களும் அதனைப் பிடித்து கரை சேர்ந்தார்கள்.

உலகில் இவ்வாறு காப்பாற்றப்பட்ட சம்பவம் இதுவே முதல் தடவை எனப் பதிவாகியுள்ளது.