வாய்ப்புக்காக படுக்கைக்கு கூப்பிட்ட தயாரிப்பாளரிடம் என் செருப்பை கழட்டி காண்பித்தேன் என்று பிரபல நடிகை ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை ஸ்ருதி. சமீபத்தில் இவர் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விழாவில் அவர் பேசியபோது. ‘‘நான் கன்னடத்தில் நடித்த படம் ஒன்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க முடிவு செய்த ஒரு தயாரிப்பாளர் என்னையே தமிழிலும் நடிக்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை தன்னுடன் நான்கு பேர் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும், அந்த நான்கு பேர்களுடன் அவ்வப்போது படுக்கையை பகிர்ந்து கொண்டால் இந்த வாய்ப்பை தான் தர தயார் என்றும் அந்த பிரபல தயாரிப்பாளர் கூறினார். அதற்கு நான் என்னுடைய செருப்பை கழட்டி அந்த தயாரிப்பாளருக்கு காண்பித்தேன்’ என்று ஸ்ருதி இந்த நிகழ்ச்சியில் பேசினார்
ஸ்ருதியின் இந்த பகீர் வாக்குமூலம் தமிழ் மற்றும் கன்னட திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.