வயோதிப குடும்பத்திற்கு பொலிஸார் கட்டிக் கொடுத்த வீடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, வள்ளிபுனம் கிராமத்தில் தற்காலிக கொட்டிலில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வசித்து வரும் அன்ரனிதாஸ் என்ற வயோதிப குடும்பம் ஒன்றிற்கு, பொலிஸார் பெறுமதியான வீடு ஒன்றினை அமைத்து கொடுத்துள்ளார்கள்.இவர்களது பெண் பிள்ளை கணவனை பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழும் குடும்பத்தின் வறுமை நிலையினை கருத்தில் கொண்டே இவ்வாறு பெறுமதியான வீடு ஒன்றினைஇ பொலிஸார் அமைத்து கொடுத்துள்ளார்கள்.

இந்த வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று(20.01.2018) காலை 10.00 மணிக்கு நடைபெற்றுள்ளது. மேற்படி வீடானது, இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கான திறப்பினையும் அவர் குடும்பத்தினரிடம் கையளித்துள்ளார்.இதன்போது, குறித்த கிராமத்தில் வறுமையில் வாழும் மக்கள் சிலருக்கும் உலர் உணவுப்பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.