அமெரிக்காவில் பில்லியனர் ஒருவர் தனது மகனின் 12-வது பிறந்தநாளுக்கு வழங்கிய பரிசானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, தனது மகனுக்கு 12 வது பிறந்த தினத்தில் அவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசினை வழங்க வேண்டும் என்று சிந்தித்த தந்தை பணத்தைக் கொடுத்ததும் உடைகளைக் கழட்டி நடனமாடும் ஸ்ட்ரிப்பர்ஸ் பெண்களை பரிசாக வழங்கியுள்ளார்.குறித்த நபர், ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தனது மகனின் பிறந்த நாளை அரைகுறை ஆடைகளுடனான பெண்களுடன் கொண்டாடிய காட்சி பரவியதையடுத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
அரைகுறை ஆடை அழகி ஒருவர், பன்னிரண்டு வயதேயான சிறுவனின் கைகளைப் பிடித்து மற்றொரு அழகியின் மார்பகங்களில் வைப்பதும் சிறுவனின் தந்தை, அழகியின் இடுப்பை அணைத்தவாறு ஆட ஊக்குவிப்பதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.இதன்போது, அச்சிறுவன் மிகுந்த மிரட்சியுடனும் தயக்கத்துடனும் செய்வதறியாது நின்றமையும் அதில் பதிவாகியுள்ளது.இது தொடர்பான காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.பணக்கார தந்தையின், இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் மிகுந்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர் வலைத்தளவாசிகள்.