ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப்படுவதற்கு சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு துணை நின்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.கிண்ணையடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், தேசிய தலைவர் உருவாக்கியதாக கூறப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்திற்கு முதுகில் குத்தி, அதனை அழிப்பதற்கு துணை நின்றது.தலைவர் சம்பந்தன், ராஜபக்ஷவோடு சேர்ந்து பெறும் சுயநிர்ணய உரிமையை நாங்கள் கோரவில்லை.நாங்கள் ஒரு அதிகார பகிர்வை ஏற்றுக் கொள்ள தயார் என்று சொல்லி உலக நாடுகளுக்கு சொன்னதன் மூலம் விடுதலைப் புலிகளை குழப்பவாதிகளாக காட்டி சிங்கவர்கள் மற்றும் தமிழர்களுக்கு கொடுக்க கூடிய தீர்வை கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி போருக்கு தேவையான ஆதரவை சர்வதேசத்திடம் இருந்து திரட்டிக் கொடுக்கப்பட்டது.அத்துடன், விடுதலைப் போராட்டத்தில் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப்படுவதற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை நின்றது.மேலும், போர் முடிவுற்று மூன்று நாட்களின் பின் இந்த கொள்கைகளை விட்டு பிரிந்து செல்வதென்று சம்பந்தன் முடிவெடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.