முதலிரவு அறையில் இப்படியும் நடக்கின்றது ….

சீனாவில் திருமணத்தன்று நடந்த முதலிரவில் கணவருடன் உறவு கொள்வதற்கு பதிலாக கணவரின் நண்பருடன் உறவு கொண்ட பெண்ணை அந்த குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கிய அதிர்ச்சி தரும் வினோத சம்பவம் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். முதலிரவு அறையில் கனவுகளுடன் சென்ற மனைவி, கணவர் தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மனைவியும் அயர்ச்சி மிகுதியால் தூங்கிவிட்டார் இந்த நிலையில், திடீரென நள்ளிரவில் அந்த பெண்ணுடன் ஒருவர் உறவு கொண்டார். கணவர் தான் என நினைத்து அந்த பெண்ணும் உறவுக்கு ஒத்துழைத்தார். ஆனால், காலையில் விழித்து பார்க்கும்போது தனது அருகே கணவரின் நண்பர் தூங்கியதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த விஷயம் மாப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு தெரிந்து அந்த பெண்ணை ஒதுக்கி வைத்துள்ளனர். தற்போது கணவரின் நண்பர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவரிடமும் பொலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.