இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச்மின் நேதன்யாகுவை பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட பலர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை தாஜ் ஓட்டலில் தங்கியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நேற்று மாலை நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.
இக் கலந்துரையாடலில்,
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரன் ஜோஹர், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பின் இறுதியில் அனைவரும் உற்சாகமாக இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது