ஜம்மு: எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர் ஜக்பால் சிங் வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் உ.பி.,யில் உள்ள சொந்த ஊரான புலந்தசாருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து இந்திய வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தற்போது எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பாலகோட், மன்கோட் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.