டெல்லி: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அல்வா கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான பட்ஜெட் அறிக்கைகள் அச்சிடும் பணி இன்று தொடங்கியது.
முன்னதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் சவுத் பிளாக்கில் அல்வா செய்யும் வழக்கமான நடைமுறை நடந்தது.
இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். அவர் அல்வா செய்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.
இதில் பங்கேற்ற ஊழியர்கள், பட்ஜெட் வெளியாகும் வரை யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது.
ஆனால் நிதியமைச்சர், அமைச்சக மூத்த அதிகாரிகள் சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் ரகசியம் வெளியாகக் கூடாது என்று கருதி, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.