ஊருபொக்க பிரதேசத்தில் பெண்ணொருவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று இரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , மனைவியின் கள்ளத்தொடர்பு தெரியவந்ததால் கோபமுற்ற கணவர் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த ரைஸ் குக்கரின் வயரில் கழுத்தை நெறித்து இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மாத்தறை மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.