சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் காய்கறிகள் விளைச்சல் சிறப்பாக உள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி,
* அவரைக்காய், நூக்கல், முட்டைக்கோஸ் – ரூ.5
* தக்காளி, முள்ளங்கி – ரூ.7
* பாகற்காய், புடலங்காய் – ரூ.8
* பீன்ஸ், பீட்ரூட் – ரூ.9
* வெங்காயம் – ரூ.42, உருளை – ரூ.13, சின்ன வெங்காயம் – ரூ.35
* வெண்டை – ரூ.10, முருங்கை – ரூ.100
முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால், அதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகின்றன. இருப்பினும் விலை வீழ்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.