அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான விவரம்!

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான அடுத்த மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

amma-scooter-aadhar-1516368951விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்!

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனங்கள் வாங்க பெண்களுக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.
மனுக்கள் கிடைக்கும் இடம்!

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான மனுக்கள் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் நாளை முதல்(ஜன 22) வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்.

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

* பிறந்த தேதிக்கான சான்றிதழ்

* இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்

• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் – நகல்.

• வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.

• நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.

• ஆதார் அடையாள அட்டை.

• எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.

• கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.

• சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.

• சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )