ஊவா மாகாண கல்வி அமைச்சரான, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, கல்வி அமைச்சுப் பதவியை துறந்துள்ளார்.
பதுளையில் உள்ள மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை முழந்தாளிட வைத்து, மன்னிப்புகோர வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விசாரணைகள் நிறைவடையும்வரை, மாகாண கல்வி அமைச்சர் பதவிலிருந்து தாம் விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸயநாயக்க அறிவித்துள்ளார்.
எனினும், முதலமைச்சர் பதவியில் அவர் நீடிக்கிறார்.