யாழ். கோப்பாய் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது!

யாழ். கோப்பாய் பகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrest-3இவர்கள் இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறி குறித்த பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் பெயர் பொறிக்கப்பட்ட 25 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.