மத்திய பிரதேச கிராமங்களில் சரியாக மின்சார வசதி வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி படிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்து 70ஆண்டுகளை கடந்த பின்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கின்றன. சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என இந்திய குடிமகனுக்கான எந்த அடிப்படை தேவையும் இல்லாத நிலையில் பெரும்பாலன மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல செயல்திட்டஙகளை தீட்டினாலும் இவர்கள் வாழ்க்கை இன்னும் அடிநிலையில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், சிந்துவார புட்டேரா தானே கிராமத்தில் வசிக்கும் மக்கள் மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தானே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கூறுகையில் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்புகளை இன்னும் பெறவில்லை என்றும் அதனால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.