சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கைது!

கேரள கஞ்சாவுடன், சிவனொளிபாத மலைக்கு வந்த, 22 பேர் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நேற்று இரவு ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியகல சோதனை சாவடியில், பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் 57 ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் கொழும்பு, மஹரகம, பிலிமதலாவ போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.