கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு சிறுமி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ9 வீதியில் நாவுல – நாலந்த வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் வாகத்தில் மோதுண்டு 13 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தாயாருடன் வீதியில் நின்ற சிறுமி, தாயின் சொல்லைக் கேட்காமல் தங்கையுடன் வீதி மாறுவதற்கு முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
நாலந்த கல்லூரியில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் கௌஷல்யா செவ்வந்தி என்ற 13 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த எலிசா தருதனி என்ற ஒன்றரை வயது சிறுமி மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாத்தளை பகுதியில் இருந்து வந்த மோட்டார் வாகனத்தில் சிறுமியும், அவரது தங்கையும் மோதுண்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாவுல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.