ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது அப்ளிகேஷன் மூலம் அதைப் பயன்படுத்துவர் நடக்கும் தொலைவுக்கு ஏற்ப காசு கொடுக்கிறது.
ஸ்வீட் காயின் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு ஃபிட்னஸ் அப்ளிகேஷனை அளிக்கிறது. இந்த அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் பயன்படுத்துபவர்கள் எத்தனை அடி நடக்கிறார்கள் என்பதை இந்த அப்ளிகேஷன் கணக்கிடும்.
எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அதற்கு ஏற்ப ஸ்வீட் காயின்கள் கிடைக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பயன்படும் சில பொருட்களை வாங்கும் போது இந்த ஸ்வீட் காயின்களை பயன்படுத்தி சலுகை பெறலாம்.
இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியும். ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது கிடைக்கிறது.