வவுனியா தோணிக்கல் மயானத்தில் மூன்று பெண்களுடன் அப்பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
வவுனியா தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றை அமைத்து குறி சொல்வது வசியம் செய்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த செல்வம் என்ற சாமியாரே நேற்றைய தினம் (20.01.2108) இரவு பத்து மணியளவில் தோணிக்கல் மயானப்பகுதியில் வைத்து மூன்று இளம் யுவதிகளுடன் மயான பூசை என கூறி பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட முனைந்த வேளையில் பெண்ணொருவர் அவ்விடத்திலிருந்து கதறிய படி வீதிக்கு ஓடிவந்த வேளையில் அங்கிருந்த இளைஞர்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் குறித்த பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் அப்பெண்களை விடுவித்துள்ளனர் குறித்த பெண்கள் யாழ் ,வவுனியா மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதேவேளை குறித்த சாமியாரின் லீலைகளுக்கு துனை நிற்கும் அப்பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டும் ராஜா என்பவரும் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டிருந்தார்.
இந்த பகுதிகளில் குறித்த சாமியார் பல நாட்களாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இதற்கு யாரும் துனை போக வேண்டாம் என்றும் அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வராத காரணத்தால் பொலிஸாரும் குறித்த சாமியாரையும் ராஜா என்பவரையும் விடுவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது