பூமியை கடக்கும், அபாயகரமான மிகப்பெரிய விண்கல்..

விண்வெளியில் சிறியது முதல் மிகப்பெரிய அளவிலான கோடிக்கணக்கான விண்கல் மிதக்கிறது. அவை பூமியை கடந்து செல்கின்றன.

தற்போது மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட பெரியது.

asteroid-the-size-of-the-burj-khalifa-1516352395830 மீட்டர் உயரமான அந்த விண்கல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி பூமியை கடந்து செல்லும் என அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லுக்கு 2002 ஏஜே.129 என பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் வந்து கொண்டிருக்கும் இந்த விண்கல் மிகவும் அபாயகரமானது என ‘நாசா’ கூறியுள்ளது.

1.1 கிலோ மீட்டர் அகலமுள்ள இந்த விண்கல் பூமியை தாக்கினால் அதில் இருந்து வெளியாகும் மண் துகள்கள் பூமியை போர்வையால் மூடியது போன்ற இருளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.