சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியான் லூங், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரின் பயணம் அமையவுள்ளது.
இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.இருதரப்பு பேச்சுக்களைத் தொடர்ந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர்இ இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையும், சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பரென அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையும், சிங்கப்பூரும் தமது இராஜதந்திர உறவுகளை 1979ஆம் ஆண்டில் நிறுவின.இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணமொன்று 13 வருடங்களின் பின்னர் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.