நாட்டில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(22.01.2018) ஆரம்பமாகின்றது. பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறும்.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பொதுமக்கள் வாக்களிப்பு இடம்பெறும்.இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.