குடு சுதாவின் குடும்பம் சுற்றிவளைப்பு: மூவர் கைது

பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குடு சுதா என்பவரின் இளைய சகோதரன், மூத்த சகோதரி மற்றும் அவரது 15 வயதான மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

625.300.560.350.160.300.053.800.450.160.90போதைப்பொருள் தடுப்பு விசேட பிரிவினரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குடு சுதா ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்ட சகோதரியின் கணவரும் சிறையில் உள்ளார்.

இளைய சகோதரனும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே பிணையில் விடுதலையானார்.

இந்நிலையில், பொதுமக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இருவர் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, நாளைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலனறுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.