ஜெயலலிதா செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார் என்றும் அவரது அறையை திறந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என கேரள நம்பூதிரி ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கேரள நம்பூதிரி வேங்கட சர்மா அளித்துள்ள பேட்டியில், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது.
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் வாயை கட்டியதே ஜெயலலிதாவின் ஆவி தான்.
ஜெயலலிதாவின் கோபம் சசிகலா மீது தான் அதிகமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. தான் துன்புறுத்தப்பட்டுதான் உயிரிழந்ததாக அவரே என்னிடம் வந்து சொன்னார்.
ஜெயலலிதாவின் ஆவி தற்போது அவரது போயஸ் கார்டன் வீட்டில்தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள அவரது அறையை திறந்தால் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும்
ஜெயலலிதாவின் ஆவி பழி வாங்க நினைத்த 31 பேரில் கொஞ்சம் கொஞ்சமாக பழி வாங்கி விட்டது. எனினும் ஆவியை அடக்குவதற்காக முயற்சியில் அவர்கள் ஈடுபட்ட காரணத்தால் பழி வாங்கும் மரணத்தின் தன்மை குறைந்திருக்கிறது. 31 பேரும் சேர்ந்துதான் ஆவியை அடக்கும் பூஜைகளை செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் அறையை திறந்தால் எதிர்மறையான விஷயங்கள் நிறைய உள்ளன. ஜெயலலிதாவுக்கு ஒரு வாரிசு இருப்பது உண்மைதான். அதை அவரே ஒப்பு கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.