தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றவர் குஷ்பு. தற்போது அரசியலில் ஈடுபட்டிருக்கும் இவர் இயக்குனர் சுந்தர். சி திருமணம் செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
தனது இரண்டு மகள்களுடன் சிரித்த முகத்துடன் இருக்கும் குஷ்புவின் வாழ்வில் நடந்த சம்பவம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
32 ஆண்டுகளாக ஆறாத காயமாக தனது மனதில் புதைத்திருந்த ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு 12ம் தேதி செப்டம்பர் மாதம் ஒரு முக்கிய சபதம் செய்தேன். அதை இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.
எனது தந்தை என்னை வீட்டை விட்டு வெளியில் போ, உடனடியாக கைநிறைய சம்பாதிக்கும் வழியை பார் என்றார். அப்போது அவரிடம் ஒரு சபதம் செய்தேன்.
உங்கள் முகத்தை என் வாழ்நாளில் இனிமேல் பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டு எனது அம்மா, சகோதரருடன் வீட்டை விட்டு வெளியேறினேன். எப்போதாவது உங்களை (தந்தை) சந்திக்க நேர்ந்தால் எனது அம்மா, சகோதரருடன் தற்கொலை செய்துகொள்வேன் என்றேன். அந்த சபதத்தில் இன்றுவரை நான் நிலையாக இருக்கிறேன். ஒருபோதும் அவரை சந்திக்க நான் விரும்பவில்லை’ என்று தனது மனதில் இருந்த ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.