அமெரிக்காவில் பச்சை மீனை வழக்கமான உணவாக எடுத்துக் கொண்டவரின் வயிற்றிலிருந்து ஐந்தரை அடி நீள நாடாப்புழு வெளிவந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபர் தீவிர வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது வயிற்றில் நாடாப்புழு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், அதனை வெளியேற்றுவதற்காக மருந்து கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சிகிச்சையின் போது சுமார் ஐந்தரை அடி நீள நாடாப்புழு வெளியேறியது. ஜப்பானிய உணவு வகையான வேக வைக்கப்படாத பச்சை மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் சூஷியை நாள் தோறும் சாப்பிட்டதால், அவருக்கு இந்த குடற்புழு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடலில் வளரும் நாடாப்புழுக்கள் 40 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை.