கள்ள சந்தையில் மது விற்பனை செய்யும் வனத்துறை அமைச்சர்! பொதுமக்கள் குற்றசாட்டு!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவுடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

large_dindugal-srinivasan-5920

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்கப்படுவதாக கூறப்பட்டது.இந்தநிலையில், கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தில்,வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவுடன் அ.தி.மு.க கிளைச் செயலாளர்கள் தலைமையில்,அனுமதி இன்றி மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக, மேல் மலைக் கிராமங்களான பூம்பாறை, குண்டுப்பட்டி, மன்னவனூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவு மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பெயரை வெளிப்படையாக சொல்வதால், கொடைக்கானல் போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.