காத்துவாங்கிய மாநகரப் பேருந்துகள்!

bus1_16430தமிழக அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்வோர் வரை பேருந்து சேவையைத்தான் பெரும்பாலும் நம்பியுள்ளனர். அரசின் திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

bus
சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்..

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகப் பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. கடந்த 20-ம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதையடுத்து பேருந்து சேவையை நம்பியிருந்தவர்களில் பலர் ரயில் சேவைக்கு மாறிவிட்டனர். இதனால் புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிடக் கூட்டம் அலைமோதுகிறது. பல பேருந்துகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக டிஜிட்டல் போர்டு பேருந்துகளில் இன்று கூட்டமேயில்லை.