“டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டேன்” என்று அவரது ஆதரவாளர் வெற்றிவேல் தடாலடியாக அறிவித்துள்ளார்.
“தனிக்கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுவேன்” என்றும் “தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவுசெய்வோம்” என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை அவர் புதிய கட்சி தொடங்கவில்லை. இதனிடையே, தினகரன் புதிய கட்சித் தொடங்கினால் அதில் தான் சேரப்போவதில்லை என்றும், அ.தி.மு.க-வில் இருக்கும் நான் வெளியில் இருந்து ஆதரவு காெடுப்பேன் என்று ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிரடியாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தினகரனின் மற்றொரு ஆதரவாளரான வெற்றிவேல், டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் சேர மாட்டேன் என்று தடாலடியாகக் கூறினார். ஜெயலலிதா வீடியோ வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்ற வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்சியில் சேராமல் வெளியில் இருந்து டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் பா.ஜ.க-வுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.
இதனிடையே, புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.