இரவு நேரத்தில் பேசிக்கொள்ளும் கோயில் சிலைகள்: தீர்க்கப்படாத மர்மங்கள்!

உலகில் இருக்கும் ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் சில சுவாரஷ்யமான விடயங்களை கூறுபவையாகவும் இருக்கும்.

TN_131024101532000000

அப்படி வரலாற்றில் பல மர்மங்களை கொண்ட சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று தான் பீகார் மாநிலத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவிலாகும்.

இந்த கோயிலில், அமையப்பெற்றிருக்கும் அம்மனின் பெயர் தான் ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி என்பதாகும்.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், வந்து வழிபட்டுச் செல்பவர்களுக்கு வாழ்வில் பல திருப்பு முனைகள் உண்டாகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.

மேலும், முன்பக்க வாயில், பக்தர்களை வரவேற்கும் படி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி உள்ள இந்த கோவிலில் இரவு நேரங்களில் மட்டும் பல மர்மமான குரல்கள் ஒலிக்கின்றதன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமல்லாது, கோவிலில் உள்ள சாமி சிலைகள் தான் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த கோவில் பூசாரிகள், கோவிலின் கருவறையில் இருந்து வரும் இந்த ஒலிகள், தாய் திரிபுர சுந்தரியின் அருள்வாக்கு என்று கூறுகின்றனர்.

பல ஆய்வாளர்களும் இங்கு வந்து தங்கி ஆராய்ச்சி செய்தும் அந்த சத்தம் மனிதர்களுடையதா அல்லது உண்மையிலேயே சிலைகள் தான் பேசிக்கொள்கின்றனவா என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.