ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையான நிலையில் தஸாநாயக்க சற்று முன்னர் கைதாகியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் தமிழ் பாடசாலையின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியதுடன், அவரை முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.