புகைப்பட நிறுவன கட் அவுட் ற்கு இனம் தெரியாதோரால் தீ வைப்பு!

யாழிலுள்ள பிரபல புகைப்பட கலையகம் ஒன்றின் பாரிய விளம்பரப் பலகையை இனம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இந்நிறுவனத்துடன், ஏற்பட்ட போட்டியினால் இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.காங்கேசன் துறை வீதி கோண்டாவிலுள்ள மேற்படி நிறுவனத்தின் கட் அவுட் பலகைக்கு தீ வைக்கப்பட்ட போதும், அதனால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.