கரையொதுங்கிய அழகிய மூங்கில் வீடு!!

தாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாக காணப்படுகின்றது.அவ்வாறு பருத்தித்துறை கடற்கரைக்கு அண்மையில் மிதந்த மூங்கில் வீட்டை கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் அவதானித்து அவற்றினை மீட்டு கரைக்குகொண்டுவந்துள்ளனர்.இவ்வாறு கரை ஒதுங்கிய மூங்கில் வீட்டினை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனால் பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் சனக்கூட்டம் நிறைந்திருப்பதாக கூறப்படுகின்றது.