முல்லைத்தீவில் குழப்ப நிலை! தென்னிலங்கை மக்களை பாதுகாத்த பொலிஸ்!

முல்லைத்தீவில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்களுக்கும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் இந்த குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் தலையிட்டு சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அரசியல் தேவைக்காக தென்னிலங்கையிலிருந்து 300 மீனவர்களை அழைத்து வந்து அவர்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை நியாயமற்றதென நாயாறு தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாயாறு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணி அளவிட்டு ஒதுக்குவதற்கு நில அளவையாளர்கள் அங்கு சென்ற சந்தர்ப்பத்தில், நாயாரு பிரதேசத்தில் வாழும் தமிழ் மீனவர்களுக்கு அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ் மீனவர்களுக்கும் தென்னிலங்கை மீனவர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, நில அளவீட்டு பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.