மைதானத்திலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ரொனால்டோ!!! (காணொளி)

லா லீகா உதைப்பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியொன்றில் ரியல் மெட்ரிட் அணியின் முன்னணி வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

Capturevரியல் மெட்ரிட் மற்றும் டெபோர்டிவோ அணிகளுக்கிடையிலான லீக் போட்டி நேற்று சென்டியாகோவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ரொனால்டோ, நெகோ மற்றும் கெரத் பலே ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடிக்க, ரியல் மெட்ரிட் அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் ரொனால்டோ தனது இரண்டாவது கோலை 84வது நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். ரொனல்டோ பந்தை தலையால் முட்டும்போது எதிரணியின் பெபைன் ஸ்கேர், பந்தை காலால் உதைக்க முற்பட்டார். எனினும் குறித்த கிக் தவறி, ரொனால்டோவின் முகத்தை பதம்பார்த்தது.

இதனால் ரொனால்டோவின் முகத்தில் இரத்தம் சொட்டியது. உடனடியாக வைத்தியர்கள் மைதானத்துக்கு வருகைத்தந்து ரொனால்டோவை அழைத்துச்சென்றனர்.

தற்போது ரொனால்டோ முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தற்போது சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணொளி இதோ…