தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண், பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தனது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
வழக்கு உ.பி., மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளை பலாத்காரம் செய்து மிரட்டி வருவதாக, அவரது தந்தை கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம், போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து பாரபங்கி பகுதியை சேர்ந்த திவ்யா பாண்டே மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து , அக்டோபர் மாதம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்தத்தில் கடிதம் இந்நிலையில், கடந்த ஜனவரி 20ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது ரத்தம் மூலம் பிரதமர் மோடி, மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், அரசியல் தொடர்பு காரணமாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர்.
இதனால், வழக்கை திரும்ப பெற, இருவரும் எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
தவறினால், நான் தற்கொலை செய்து கொள்வேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். தெரியாது இது தொடர்பாக மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் சசி சேகர் சிங் கூறியதாவது: பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் திவ்யா பாண்டே மற்றும் அங்கித் வெர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் கடிதம் எழுதியுள்ளது குறித்து எனக்கு தெரியாது எனக்கூறினார்.