இனி கணவருடன் சண்டையே போடமாட்டாங்களாம் மனைவிமார்கள்!… தமிழகத்தில் எப்படி இது சாத்தியம்?

தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.

Tamil-Husband-and-Wife-Love-story

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலைமறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள் இன்று திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி-கல்லூரகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இன்று பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனவே மாணவர்கள் பஸ் கட்டண உயர்வின் பாதிப்பை உணர்ந்தனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் ஒருவரும், கிராமத்து அம்மா ஒருவரும் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த காட்சியே இதோ…


மறுபுறம் நெட்டிசன்கள் பஸ் கட்டணம் உயர்த்தியதால் சில நன்மைகளையும் தற்போது வெளியிட்டுள்ளனர்

  • சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவனிடம் கோபித்து அம்மா வீட்டிற்கு பஸ் ஏறுவது தடுக்கப்படும்.
  • வீட்ல விசேஷம்னா குரூப் குரூப்பா கிளம்பிவர சொந்தக்காரங்க கூட்டம் குறையும்.
  • பொங்கல் மாதிரி விசேச நாளுங்கல்ல சென்னை ஆளே இல்லாத அனாதை போல காலியாவது இனி தடுக்கப்படும்.
  • இரண்டு ஸ்டாப்பிற்கே 20 ரூவா ஆகிறதால மக்கள் கொஞ்சம் நடக்க ஆரம்பிப்பாங்க சுகர் பிபி இருக்காது.