விசித்திரங்கள் நிறைந்த நமது உலகில் கற்பனையில் அடங்காத விஷயங்கள் கூட நடந்தேறி வருகின்றன. இப்படிக் கூடவா செய்வார்கள்? ஏன் இப்படி? என ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
அவற்றில் ஒரு வகை தான் இவை.
யாழ்
தென் அமெரிக்காவில் 18ம் நூற்றாண்டில் இது மிகவும் சாதாரணம். எலும்புக் எலும்புகூடுகளினால் ஆன யாழ் இசை கருவிகளை போர் வீரர்கள் கையில் வைத்திருப்பார்களாம். மண்டை ஓட்டை பாதியாக அறுத்து அதில் இந்த கருவியை செய்துள்ளனர்.
பாத்திரங்கள்!
கற்காலத்தில் இருந்த பழக்கம் தான். அப்போது எலும்பு கூடுகளை வைத்து தான் பாத்திரங்கள், போர் கருவிகள் செய்தனர்.
இதை நாம் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளோம். ஆனால், 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த The Aztec இனத்தவர்கள் பெண்களின் எலும்புகளில் இருந்து கத்தி, ஸ்பூன் போன்றவற்றை தயாரித்துள்ளனர்.
கூந்தல் சூட்!
மனித முடிகளை கொண்டு The Apex Predator என்ற சூட் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க அழகாக இருந்தாலும், இது மனித கூந்தலால் ஆனது எனப்படும் போது தான் கொஞ்சம் உதறுகிறது.
ஆபரணங்கள்!
சிலர் அவர்களது பால் பல்லை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால், இங்கே பாருங்கள்… பற்களை வைத்துக் கொண்டு கழுத்தில் போடும் சங்கிலி, மோதிரம், காதணி எல்லாம் செய்துள்ளனர்.
எலும்புக்கூடுகள் நிறைந்த சர்ச்!
“The Sedlec Ossuary” என்ற சர்ச் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைக்கும். காரணம் இந்த சர்ச் கட்டிடம் வெளிப்புறம் இருந்து பார்க்க சாதாரணமாக இருந்தாலும்.
உள்ளே சென்று பார்த்தால் விசித்திரமாக இருக்கும். நான்கு புற சுவர், பில்லர்கள், சீலிங் என எல்லா இடங்களிலும் எலும்புக் கூடுகள் அலங்காரம் தான் இருக்கிறது.