ஏன் இப்படி பன்னிருக்கீங்க?, ரொம்ப கஷ்டமா இருக்கு: வருத்தத்தில் சிம்பு!

என்னதான் தோல்விப் படங்களை அதிகமாக கொடுத்து வந்தாலும் சிம்புவிற்கு என்று தனி ரசிகர்கள் படையே உள்ளது.

இந்நிலையில், தனது தீவிர ரசிகர் ஒருவரை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, சிம்புவின் மீது கொண்ட அதீத அன்பால் தனது கையில் சிம்புவின் பெயரை டாட்டு குத்தியுள்ளார். அந்த ரசிகர் இதை சிம்புவிடம் காண்பித்துள்ளார்.

அதைப் பார்த்த சிம்பு, ஏன் இப்படி பன்னீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு… எனக் கூறி அந்த ரசிகரின் தோளில் கைப் போட்டு அழைத்துச் செல்வது போல் வீடியோ சமூக வலைதலத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த ரசிகரை சிம்பு சந்தித்தபோது அந்த தீவிர ரசிகர் சிம்புவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.