தனியாருக்கே கொள்ளை லாபம், இதன் பின்னாடி இவ்வளவு இருக்கா..? விழித்து கொள்ள வேண்டிய நேரமிது, கட்டண உயர்வால் யாருக்கு லாபம்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சட்டக் கல்லூரி, குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி, பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!!

தமிழகத்தில் பல கல்லூரிகள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி களம் இறங்கியுள்ளனர்

பேருந்துக் கட்டண உயர்வால் மத்திய, மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும்தான் லாபம் என்று போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துக் கட்டண உயர்வு, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் வேறுவழியின்றி மக்கள் பயணித்துவருகின்றனர். வேலைக்கு போக பேருந்தில் பயணிப்பதை விட, பேருந்தில் பயணிப்பதற்காகவே வேலைக்கு போக வேண்டும் என்ற நிலை தான் உருவாகியுள்ளது

koviaaa

இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை சாதாரண மக்களால் சமாளிக்க முடியவில்லை. அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் இங்கு மாட்டிகொண்டுள்ளார்கள்..

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தாலும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை, என்பது தான் அப்பட்டமான உண்மை..

ஆனால், டிக்கெட் கட்டண உயர்வால் மத்திய, மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும்தான் லாபம் என்று போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kova

பேருந்துக் கட்டண உயர்வுமூலம் கிடைக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய , மாநில அரசுகளுக்கு வரி என்ற பெயரிலும்

பஸ்சின் உதிரிப்பாகங்கள், டயர், டியூப் போன்றவற்றைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் செல்லும்.

police 1

ஏனெனில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெரும்பாலான பணிகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன என்பது மிக முக்கியமானது