நடிகை சாவித்திரியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறுதான் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் டெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

download

வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் இதனை ‘எவடே சுப்ரமணியன் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான இதில் கீர்த்தி தான் சாவித்திரி.

மறைந்த நடிகை சாவித்திரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு தங்க காசுகளை அன்பளிப்பாக கொடுப்பாராம். இது தான் அவரின் ரியாலிட்டி என்பார்கள். இப்படத்தில் கீர்த்தி தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும், தற்போது அந்த குணத்தை நிஜவாழ்கையிலும் செய்துகாட்டியிருக்கிறார், இதனால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷை வாழ்த்தியுள்ளனர்.