கோர விபத்து : பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்தில் பலி!

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில், பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

யாழ். பூங்குடிதீவு வைத்தியசாலை சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் திருலங்கன் கேஷனா என்ற வயது 9 என்ற மாணவியே இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி, பாடசாலைக்கு தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, புங்குடுதீவு வைத்தியசாலை சந்தியில் கடற்படை கவச வாகனம் மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடற்படை கவச வாகனத்தைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Capturevb