நீங்க லவ் பண்ணும் பொண்ணு உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க..

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன.

78559ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன.

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…

பெண்களுக்கு ஒரு ஆணை பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா?

# பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள் மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

# பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான்.

ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பா…

# உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

# உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவு தான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால், நிச்சயம் அது காதல் தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

01-1435736863-2romanticwordstoreplaceiloveyouinloveproposal  நீங்க லவ் பண்ணும் பொண்ணு உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க.. இதை மிஸ் பண்ணாம படிங்க 01 1435736863 2romanticwordstoreplaceiloveyouinloveproposal

# எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறியடிக்காமல், செல்லுங்கள்.

ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

# உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

# நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அது கூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.