கொடூரமாக மனைவியை கொன்று உடல் பாகங்களை சமைத்து உண்ட கணவர்!

மெக்சிகோவில் மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரை சமையல் செய்து சாப்பிட்ட கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மெக்சிகோவில் கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதில்லை. ஆங்காங்கே பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கும், கொலை நிகழ்வுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் மெக்சிகோவின் டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா(28).

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனது இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார்.

அவரது இரு குழந்தைகளும் முதல் கணவரின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த வாரம் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக, மேக்டலினா தனது முதல் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மேக்டலினா வீடு திரும்பாததால், அவரது இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் மேக்டலினாவின் முதல் கணவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் அவரது உடல் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்தன.

The mother-of-two's remains were also found in plastic bags that had been stored in a refrigerator at a property owned by her ex-husband

அவரது சில உடல் பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், தலைமறைவான மேக்டலினாவின் முதல் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.