நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா, தங்களது இல்ல விழாவில் பங்கேற்க அழைப்பிதழை கொடுத்துச் சென்றார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் இல்லத்துக்கு இன்று பிற்பகலில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா சென்றார். கமலைச் சந்தித்து தமது இல்ல விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர், பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவே அன்புமணியின் மகள் சம்யுக்தா திருமணத்தில் நடிகர் கமல் அழைப்பின் பேரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.