சென்னை காட்டான்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில், மாணவர் ஒருவர் கல்லூரியின் நான்காம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னை எஸ்ஆர்ஆம் பொறியியல் கல்லூரியில், ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் நிதின் (22) என்ற மாணவர் நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வெளியான தேர்வு முடிவுகளில் ஜாய் நிதின் ஏழு பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து, தேர்வு முடிவுகள் பற்றி அவரின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அம்மாணவர் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி உள்ளார்.
இந்த வேளையில், நேற்று கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றின் நான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை அங்கிருந்த எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.