அக்காவும், தம்பியும் நீதிமன்றில் செய்த மோசமான செயல்!

புத்தளம் நீதிமன்றத்திற்குள் கஞ்சா விற்பனை செய்ய சென்ற அக்காவும், தம்பியும் கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

kanja-1கல்பிட்டி – பள்ளிவாசல்துறையில் வசித்து வரும் இவர்கள் வழக்கிற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி குழந்தையுடன் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பெண்ணை சோதனையிட்ட போது, அவரது மார்பு கச்சையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெண்ணின் சகோதரனுடைய பணப் பையை சோதனையிட்ட போது அதில் ஒரு கஞ்சா பொதி இருந்துள்ளது.

சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளுக்கு மிகவும் தந்திரமான முறையில் அதிக விலைக்கு இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்து வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.