சர்வதேச கண்டனங்களை புறம் தள்ளி அணு ஆயுத பரிசோதனை நடத்திய வடகொரியா ?

சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது ஐ.நா சபை பல்வேறு தடைகளை விதித்தது. தற்போது, கள்ளத்தனமாக ஈரானுக்கு ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.“நியூக்ளியர் ஷட்டவுன்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், கிழக்காசிய நாடுகளில் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் கோர்டான் சங் (Gordon Chang) என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஈரானுக்கு கப்பல்கள் மூலமாக வடகொரியா கள்ளத்தனமாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை அமெரிக்கா தடுக்க வேண்டும். இதனை நாம் அனுமதிக்க கூடாது. இதை அனுமதித்தால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகை செய்யும். ஐ.நா தனது விதிமுறைகளை செயல்படுத்தா விட்டாலும், அமெரிக்கா செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.குறைந்த பட்சம் வடகொரிய கப்பல்கள் அதன் கடல் எல்லையில் ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத கொள்கையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு நடந்து வரும் நிலையில், இந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.