சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகரில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகள் நிவேதாஸ்ரீ 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் அனிதாஸ்ரீக்கு 3 வயதாகிறது. ராமச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ராம்ஜி என்ற பெயரில் பைனான்ஸ் மற்றும் ஏர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மகேஸ்வரி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் இன்று கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராமசந்திரன், திருமயத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்கொலை செய்த தகவலறிந்து காரைக்குடிக்கு வந்த உறவினர்கள், காரைக்குடி காவல்துறைக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் உடல்களை திருமயம் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருமயம் போலீசார் அவர்களது உடலைக் கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். காரைக்குடி வடக்கு மற்றும் திருமயம் காவல்துறையினர் இவர்களது மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தாய், தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், குழந்தைகள் நிவேதா ஸ்ரீ, அனிதாஸ்ரீ ஆதரவற்றோர் ஆகியிருக்கிறார்கள்.