அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 40 புகலிட கோரிக்கையாளர்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற புகலிட கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்துடன், செய்துகொண்ட உடனபடிக்கையின் பிரகாரம் இவர்கள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு தொகுதியினர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் 40 ஆண்கள் அமெரக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 பேர் அடுத்த மாதம் அளவில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.